karnataka-style-chicken-saaru-gravy-recipe கர்நாடகா ஸ்டைல் சிக்கன் கிரேவி - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 30 August 2021

karnataka-style-chicken-saaru-gravy-recipe கர்நாடகா ஸ்டைல் சிக்கன் கிரேவி

Karnataka Style Chicken Saaru Gravy Recipe In Tamil

கர்நாடகா ஸ்டைல் சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்:

* சிக்கன் - 300 கிராம்

* மிளகாய் தூள் - 1 டீபூன்

* மஞ்சள் தூள் - 1 /4 டீபூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* எண்ணெய் - தேவையான அளவு

மசாலாவிற்கு...

* வெங்காயம் - 2 (நறுக்கியது)

* துருவிய தேங்காய் - 2 டேபிள் பூன்

* பூண்டு - 4 பல்

* இஞ்சி - 1 இன்ச்

* பட்டை - 1 இன்ச்

* கிராம்பு - 4

* வரமிளகாய் - 4

* கசகசா - 1 டேபிள் பூன்

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு மஞ்சள் சேர்த்து கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கசகசாவைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின் அதில் கிராம்பு, பட்டை, வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்கவும்.

* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் துருவிய தேங்காயைப் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.


* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும். பின் அதில் வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கழுவிய சிக்கன், மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். சிக்கனானது நன்கு வதங்கி வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஒரு கப் நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.


* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான கர்நாடகா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயா


No comments:

Post a Comment