andhra-style-yam-stir-fry-recipe ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 30 August 2021

andhra-style-yam-stir-fry-recipe ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல்

Andhra Style Yam Stir Fry Recipe In Tamil

ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல்


தேவையான பொருட்கள்:

* சேனைக்கிழங்கு - 250 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)

* கடுகு - 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* பச்சை மிளகாய் - 1

* இஞ்சி - 1 இன்ச்

* பூண்டு - 4 பற்கள்

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் சேனைக்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் ஒரு கப் நீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடிகட்டிக் கொள்ளவும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.


* பின் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து கிளறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

* சேனைக்கிழங்குடன் மசாலா அனைத்தும் ஒன்றுசேரும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் தயார்.

No comments:

Post a Comment