Hyderabad Biryani (ஹைதராபாத் பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், மநுரமாக சிறிதாக நறுக்கிய காய்கறிக் கலவை (உருளைக்கிழங்கு, டானிப்ஸ், கேரட் பீட்ரூட்) மற்றும் பச்சைப் பட்டானி சேர்த்து - ஒன்றரை கப், எலுமிச்சைப் பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), தயிர் - ஒரு கப், புதினா (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), பூண்டுப் பல் - 6, நெய் எண்ணெய், உப்பு – தேலையான அளவு. அரைத்துக்கொள்ள: முந்திரிப்பருப்பு - 10, கசகசா - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 2, இஞ்சி - அரை அங்குல நீளத் துண்டு (தோல் சீவவும்), கொத்தமல்விந்தழை - அரை கப் (அலசி ஆய்ந்தது.
செய்முறை: அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும், வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து சிவந்க வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
இதனுடன் காய்கறிக் கலவையைச் சேர்த்து வதக்கவும், தமிரைக் கடைந்து உப்பு, ஒரு கப் நீர் சேர்த்து குக்கரில் மாற்றவும். ஒரு கொதி வத்தவுடன் அரிசியைப் போட்டு குக்கரை மூடி, நீயைக் குறைத்து வைத்து 10-15 நிமிடங்கள் வேகவிட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து, புதிண, கொத்தமல்விந்தழை சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment