Hot veg biryani (ஹாட் வெஜ் பிரியாணி )
தேலையானவை:; பாசுமதி அரிசி - ஒரு கப், சதுரமாக நறுக்கிய காய்கறிக் கலவை - ஒரு கப் (சௌசௌ, பு.வங்காய், காலிஃப்ளவர், தோல் சீவிய உருளைக்கிழங்கு), வறுத்த முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மராட்டி மொக்கு - ஒன்று, உலர்ந்த அன்னாசிப்பூ - 2 இதம். பிரியாணி இலை - ஒன்று, சோம்பு, சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், எண்ணொய் - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு. வறுந்துப் பொடிக்க: தனியா - 2 டேபிள்ஸ்பூன், முழு உளுந்து ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 4 பல், உப்பு - சிறிதளவு,
செய்முறை: யாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வறுத்து, மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும், பிறகு, அதை நெய்யில் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் பிரியாணி இலை, மராட்டி மொக்கு,
அன்னாசிப்பு, சோம்பு தாளித்து, நறுக்கிய காய்கறிக் கலவை சேர்த்து வதக்கி... உப்பு, வறுத்து அரைத்த பொடி, சர்க்கரை சேர்த்து வதக்கவும், பிறகு, 2 கப் கடுநீரை ஊற்றி, அரிசியைச் சேர்க்கவும், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தைச் சூடாக்கிக்கொள்ளவும். அரிசிக் கலவையை அந்தப் பாத்திரத்துக்கு உடனே மாற்றவும். ஒரு கொதி வரும் வரை சூடாக்கி உடனே மூடவும். ஒரு மணி நேரம் கழிந்து வெந்நிருக்கிறதா என பார்த்து முந்திரிப்பருப்பு தூவிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment