Fruit and Nut Flavor ( ஃப்ரூட் அண்ட் நட் புலவு )
தேவையானவை பாசுமதி அரிசி - 2 கப், முந்திரி - 5, பாதாம் - 6. அன்னாசிப்பழம் ஒரு துண்டு, ஆப்பின் (விருப்பப்பட்டால்) - ஒரு துண்டு, சாக்கரை ஒரு டீஸ்பூன். குங்குமப்பூ -
சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 3. தாளிக்க: பட்டை, லவங்கம்,
ஏலக்காய் - தலா 1, நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன், கருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்
(நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்).
செய்முறை பாசுமதி அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து, உதிர் உதிராக வடித்துக்கொள்ளுங்கள்: (குக்கரில் எனப்பது என்றால் ஒரு கப் அரிசிக்கு, ஒன்றரை கப் தண்ணீர்). முந்திரி, பாதாமை மெல்லியதாக, நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள். பழங்களைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் நெய்யைக் காயவைத்து அதில் சர்க்கரை சேருங்கள் சர்க்கரை உருகி, மேலெழும்பி வரும்போது தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். கீறிய பச்சை மிளகாயையும் சேருங்கள். பிறகு, சீவிய முந்திரி, பாதாம் சேர்த்து, அவை வறுபட்டதும், வடித்த சாதம். நறுக்கிய பழங்கள், குங்குமப்பூ, தேவையான உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். குழந்தை களுக்குக் கொடுக்க ஏற்ற புலவு, கெட் டு கெதர்களுக்கும் செய்யலாம்.
No comments:
Post a Comment