ருசியான... இளநீர் பாயாசம்
தேவையான பொருட்கள்:
* கொழுப்பு நிறைந்த பால் - 1 1/2 கப்
* கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
* இளநீர் கூழ் - 1/2 கப்
* சர்க்கரை - 1 டேபிள் பூன்
* கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் பூன்
* ஏலக்காய் பொடி - சிறிது
அரைப்பதற்கு...
* இளநீர் கூழ் - 1/2 கப்
* இளநீர் - 3/4 கப்
(2 இளநீர் இந்த ரெசிபிக்கு சரியாக இருக்கும்.)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இளநீர் கூழ் மற்றும் இளநீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாலை நன்கு 5
நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, ஓரளவு கெட்டியாகவும், க்ரீமியாகவும் மாறும் வரை நன்கு கிளறி இறக்கி, குளிர வைக்கவும்.
* பின்பு அதில் அரைத்த இளநீர் கூழை உற்றி, அத்துடன் தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பரிமாறினால், சுவையான இளநீர் பாயாசம் தயார்.
குறிப்பு:
* இளநீர் பாயாசம் செய்வதற்கு, இளநீரின் உள்ளே உள்ள பகுதி மென்மையாக கூழ் போன்று இருக்க வேண்டும். கெட்டியாக தேங்காய் போன்று இருக்கக்கூடாது.
* உங்களுக்கு
வேண்டுமானால், இத்துடன் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்துக் கொள்ளலாம்.
* இளநீர் பாயாசத்தின் சுவை அதிகரித்திருக்க வேண்டுமானால், பயன்படுத்தும் பால் கொழுப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும்.
* கண்டென்ஸ்டு மில்க் இல்லாவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் இதை சேர்த்தால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
No comments:
Post a Comment