செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல்
தேவையான பொருட்கள்:
* முட்டை - 6
* பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரக விதைகள் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* பின்பு அதில் பீன்ஸ் சேர்த்து,
ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வேகும் வரை வதக்கவும். அதற்குள் மிளு மற்றும் சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
* பிறகு அரைத்த பொடியை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கவும்.
* அடுத்து, அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, தேவையான
அளவு உப்பு தூவி குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.
* முட்டை நன்கு வெந்ததும், அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் தயார்.
No comments:
Post a Comment