egg-butter-masala-recipe- (முட்டை பட்டர் மசாலா) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 16 August 2021

egg-butter-masala-recipe- (முட்டை பட்டர் மசாலா)

Egg Butter Masala Recipe In Tamil

முட்டை பட்டர் மசாலா


தேவையான பொருட்கள்:

* முட்டை - 4

* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)

 வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 6 பல்

* இஞ்சி - 1/4 இன்ச்

* வெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்

* பிரியாணி இலை - 1

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

* உலர்ந்த வெந்தய கீரை - 1 டீஸ்பூன்

* முந்திரி - 20

* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் முந்திரியை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் முட்டையை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.


* பின்பு இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள முந்திரியைப் போட்டு நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* அடுத்து, அதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பிரியாணி இலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.


* பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி, அதில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குறைவான தீயில் பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, காய்ந்த வெந்தயக்கீரை மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு, வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக வெட்டிப் போட்டு, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், முட்டை பட்டர் மசாலா தயார்.

No comments:

Post a Comment