தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு சீனி பணியாரம்
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* ஜவ்வரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் - 2
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில்
பச்சரிசி மற்றும் ஜவ்வரிசியை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் நன்கு கழுவி நீரை வடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை மிக்ஸியில் போட்டு 1/4 கப் நீர் சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்த பின் தண்ணீர் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால் அதிக நீராகி நன்றாக வராமல் போய்விடும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பௌலில் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். மாவானது தோவை மாவ
ு பதத்தில் இருக்க வேண்டும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு (சற்று தாராளமாக) எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள்.
* அடுத்து ஒரு கரண்டி மாவு எடுத்து, எண்ணெயில் மெதுவாக ஊற்றுங்கள். பின் அதன் மேல் எண்ணெயை லேசாக ஊற்றிவிடுங்கள்.
* பணியாரத்தின் முனைகள் பென்னிறமாக மொறுமொவென்று மாறும் போது எடுங்கள்.
இப்படி மீதமுள்ள மாவை ஊற்றி எடுத்தால், சுவையான செட்டிநாடு சீனி பணியாரம் தயார்.
No comments:
Post a Comment