creamy-mealmaker-gravy-recipe ருசியான... மீல்மேக்கர் கிரேவி - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Tuesday 31 August 2021

creamy-mealmaker-gravy-recipe ருசியான... மீல்மேக்கர் கிரேவி

Creamy Mealmaker Gravy Recipe In Tamil

ருசியான... மீல்மேக்கர் கிரேவி


தேவையான பொருட்கள்:

* மீல் மேக்கர் - 2 கப்

* பெரிய வெங்காயம் - 1

* தக்காளி - 2

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

* வெண்ணெய் - 1 டீஸ்பூன்

* காய்ந்த வெந்தய இலைகள் - 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன் அல்லது பால் - 1/2 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மீல்மேக்கரை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் 3-4 முறை அலசி, பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீல்மேக்கரைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.


* பின்பு ஒரு பாத்திரத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தைப் போட்டு 1 கப் நீர் ஊற்றி வேக வைத்து இறக்கி, குளிர வைக்கவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், வெங்காய பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி சிறிது நேரம் நன்கு வதக்கி விட வேண்டும்.


* பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு மீல்மேக்கரை போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும், காய்ந்த வெந்தய கீரை சேர்த்து இறக்கிவிடவும்.

* இறுதியில், அதன் மேல் க்ரீம் சேர்த்து கிளறிவிடலாம் அல்லது பாலை ஊற்றினால், மீண்டும் அடுப்பில் வைத்து ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கிடவும். இப்போது ருசியான மீல்மேக்கர் கிரேவி தயார்!

No comments:

Post a Comment