chicken-soup-recipe ருசியான... சிக்கன் சூப் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday 22 August 2021

chicken-soup-recipe ருசியான... சிக்கன் சூப்

Chicken Soup Recipe In Tamil

ருசியான... சிக்கன் சூப்


தேவையான பொருட்கள்:

* சிக்கன் - 300 கிராம்

* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

* தண்ணீர் - 2 கப்

அரைப்பதற்கு...

* சின்ன வெங்காயம் - 10

* கொத்தமல்லி - 1/4 கப்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* மிளகு - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

* ஏலக்காய் - 1

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* கறிவேறிப்பிலை - சிறித

* பெரிய வெங்காயம் - 1 சின்ன வெங்காயம்

செய்முறை:

* முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.


* பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.

No comments:

Post a Comment