bitter-gourd-masala-recipe பாகற்காய் மசாலா - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 27 August 2021

bitter-gourd-masala-recipe பாகற்காய் மசாலா

Bitter Gourd Masala Recipe In Tamil

பாகற்காய் மசாலா

தேவையான பொருட்கள்:

* பாகற்காய் - 3

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது)

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* மிளகாய் தூள் - சுவைக்கேற்ப

* வெல்லம் அல்லது சர்க்கரை - 1 டீஸ்பூன்

* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பாகற்காயின் உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாகற்காயை போட்டு, 2-3 டேபிள் பூன் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.


* பின்பு குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒர ு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு தக்காளியை சேர்த்து உப்பு தூவி நன்கு தக்காளி வதங்கும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மாங்காய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.


* பின்பு வேக வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு, சர்க்கரை தூவி கிளறி விட வேண்டும்.

* பின் மூடி வைத்து குறைவான தீயில் பாகற்காயில் மசாலா அனைத்தும் சேரும் வரை ஒரு 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாகற்காய் மசாலா தயார்.

No comments:

Post a Comment