Babadi Kandia Biryani (பபடி காண்டியா பிரியாணி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday, 25 August 2021

Babadi Kandia Biryani (பபடி காண்டியா பிரியாணி)

Babadi Kandia Biryani   (பபடி காண்டியா பிரியாணி)




தேவையானவை: பாகமதி அரிசி - ஒரு கப், கடலை மாவு - அரை கட்ட அரிசி மாவு - கால் கட்பு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சமையல் சோடா - ஒரு சீட்டிகை, பொடிந்த ஓமம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தாள், இஞ்சி - பூண்டு விழுது - தபா ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 2 பேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொந்தமல்வித்தழை (ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், சன்ன ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு, நெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை: அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்க வும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரிசியை சில நிமிடங்கள் வறத்துக்கொள்ளவும். கடலை மாவு, உப்பு, அரிசி மாவு சமையல் சோடா, மஞ்சள்தூன், பொடிந்த ஓமம், மிளகாய்த்தூள் சேர்த்து நீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து சப்பாத்தியாக திரட்டி, சிறு சிறு சதுரமாக வெட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பபடி காண்டியா ரெடி. இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும், குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிறைவும். இதனுடன் தேவையான நீர்விட்டு... கொதி வந்ததும் அரிசி, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறி, கொத்தமல்லித்தழை சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு குக்கரைத் திறந்து, படி காண்டியா போட்டுப் புரட்டவும். பரிமாறும் முன் சன்ன ஓமப்பொடி தூவி பரிமாறவும். இந்த வகை பிரியாணிக்கு சைட் டிஷ் தேவையில்லை.


No comments:

Post a Comment