Vegetables in boiling water (காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் )
தேவையானவை:
* வெங்காயம் - ஒன்று
கேரட் - 2
* வெங்காயத் தழை - ஒரு கொத்து
பூண்டு - 8 பல் நசுக்கியது.
இஞ்சி - சிறிது துருவியது.
உப்பு - ஒரு சிட்டிகை
* கறிவேப்பிலை - ஒரு கொத்து · எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. காய்கறிகளை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
2. பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு 5 நிமிடங்கள் காய்கறிகளை நன்றாக வதக்கிக் கொள்ளவும், 3. பின் அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் வரை மிதமான தீயில் வேசு
விடவும். 4. இதன்பிறகு தண்ணீரை நன்றாக வடித்து விடவும். காய்கறிகளை நன்றாக அழுத்தி தண்ணீரை பிழிந்து எடுக்கவும்.
5. இந்த தண்ணீரை நீங்கள் ஐஸ் ட்ரேயில் ஊற்றிவைத்து கட்டிகளான பிறகு காற்றுப்புகாத பையில் போட்டு வைத்து விடலாம். அதன்பிறகு நீங்கள் தயாரிக்கும் கஞ்சி, கூழ் ஆகியவற்றில் இந்த காய்கறி வேசு வைத்த நீரை சேர்த்து கொள்ளவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது
காய்கறிகள் வேகவைத்த நீரில் அதிகமான சத்துகள் இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்றது இது.
அனைத்து உணவு வகைகளுடனும் இதனை சேர்த்து குழந்தைகளுக்கு தாலாம்.
இதனை உறையவைத்து தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம்...
No comments:
Post a Comment