Soy Stuffed Chapati (சோயா ஸ்டஃப்டு சப்பாத்தி )
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - நெய் கல்வை - 1டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு.
பூரணத்துக்கு: சோயா - 15 உருண்டைகள், சின்ன வெங்காயம் அரை கப், பச்சை மினகாய் விழுது - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
செய்முறை கோதுமை மாவை உப்பு, நெய், பால் சேர்த்து நன்கு பிசையுங்கள். சோயாவை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து பச்சை தண்ணீரில் இரு முறை நன்கு அலசங்கள் நன்கு பிழிந்து, மிக்ஸியில் அடித்து உதிர்த்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயை காய வைத்து, உதிர்த்த சோயாவை சேர்த்து
வதக்கிக்கொள்ளுங்கள். அத்துடன் பச்சை மிளகாய் விழுது. உப்பு, மஞ்சன்தூள் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்கி, வெங்காயம் சேர்த்து கிளறி இறக்குங்கள்.
மாவை சிறு கிண்ணம்போல் செய்து, பூரணம் வைத்து தேய்த்து சப்பாத்திகளாகச் சுட்டெடுங்கள்.
No comments:
Post a Comment