Sauce Sabzi (சௌசௌ சப்ஜி )
தேவை: சௌ சௌ - 2, வெங்காயம் - 4, வற்றல் மிளகாய் - 6, தனியா - 1 ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1 கப், பொட்டுக்கடலை - 2 ஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு, நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: தனியா, சீரகம், வற்றல் மிளகாய் சேர்த்து அரைக்கவும். சௌ சௌ, வெங்காயத்தை பொடியாக அரியவும். நெய்யை வாணலியில் விட்டுக் காய்ந்ததும் அதில் வெங்காயத்தை வதக்கி,
சௌசௌ சேர்க் கவும். அத்துடன் அரைத்த மசாலா விழுது, புளிக் கரைசல், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து வேகவிடவும். வெந்ததும் பட்டூராவுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment