Samia Kesari (சேமியா கேசரி )
சேமியா கேசரி
தேவை: வறுத்த சேமியா -500 கிராம், தண்ணீர் - 500 மி.லி., சர்க்கரை - 300 கிராம், நெய் - 1 கப், முந்திரி, பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் - தலா 10, ஏலப் பொடி அரை டீஸ்பூன், கேசரிப் பவுடர் - 1 சிட்டிகை.
செய்முறை : நெய்யில் பருப்புகள், கிஸ்மிஸ் வறுக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் சேமியாவைச் சிறிது சிறிதாகப் போட்டு கட்டி விழாமல் கிளறவும்.
சேமியா வெந்ததும், சர்க்கரை, கேசரிப் பவுடர். ஏலக்காய் சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்ததும், வறுத்த முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் மற்றும் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
No comments:
Post a Comment