'Banana Crispy ('நேந்திரம்பழ க்ரிஸ்பி )
நேந்திரம்பழ க்ரிஸ்பி
தேவை: கனிந்த - 2 நேந்திரம்பழம் வட்ட துண்டுகளாக்கியது, நெய் - 2 டேபிள் ஸ்பூன், வெல்லப்பாகு 2 டேபிள் ஸ்பூன், முந்திரிப் பகுப்பு. கொப்பரைத் தேங்காய் - இரண்டும் துருவியது தலா ஒரு டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.
செய்முறை: தோசைக்கல்லில் பாதி நெய்யை ஊற்றி, அதன்மேல் பழத்துண்டங்களைப் பரத்தி,
மிதமான சூட்டில் மூடிவைத்து சற்று நிறம் மாறி வதங்கியதும் வெல்லப்பாகை ஊற்றி, மேலாக ஏலப்பொடி. தேங்காய், முந்திரித் துருவலைத் தூவி பாக்கி நெய்யைப் பரவலாக ஊற்றவும். மிதமான தீயில் 3 நிமிடங்கள் வைத்துக் கருகாமல் பொன்னிறமானதும் இறக்கவும்.
No comments:
Post a Comment