Keshwaragu Alva (கேழ்வரகு அல்வா )
கேழ்வரகு தேங்காய்பால் அல்வா
தேவை: கேழ்வரகு - 250 கிராம், பொடித்த வெல்லம் - 700 கிராம். நெய் - 250 கிராம், கெட்டி தேங்காய்ப் பால் - 1/2 கப், உடைத்து நெய்யில் வறுத்த முந்திரி - 50 கிராம், ஏலப்பொடி - 1 டீஸ்பூன், நெய்யில் வறுத்துப் பொடித்த ஜாதிக்காய்ப் பொடி, சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன்.
செய்முறை: கேழ்வரகை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் மிக்ஸியில் 3 முறை அரைத்து, வடிகட்டி பால் எடுக்கவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து மேலே தெளிந்திருக்கும் நீரை நீக்கினால் கீழே கேழ்வரகுக் கூழ் படிந்திருக்கும். அத்துடன் தேங்காய்ப் பால் வெல்லம் சேர்த்துக் கரைத்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி,
அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். கெட்டியாகும்போது இடை இடையே நெய்விட்டுக் கிளறவும். முந்திரி மற்றும் மூன்று பொடிகளைச் சேர்த்துக் (பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும்) கிளறி, அல்வா பதம் வந்ததும் தாம்பாளத்தில் கொட்டித் துண்டு போடவும்.
No comments:
Post a Comment