Oatmeal (ஓட்ஸ் கீர் )
தேவையானவை:
ஓட்ஸ் - 3 டேபிள்ஸ்பூன்
* தூள் செய்யப்பட்ட பனங்கல்கண்டு -சிறிது
* ஏலக்காய் தூள் - தேவையொனில்
*குங்குமப்பூ தேவையெனில்
செய்முறை :
1. ஓட்ஸை நீங்கள் முழுதாகவோ அல்லது தூளாக அரைத்தோ பயன்படுத்தலாம்.
2. தேவையான அளவு தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும்.
3. பின் அதில் ஓட்ஸ் மற்றும் பனங்கல்கண்டை சேர்த்து நன்றாக வேக விடவும். 4. நன்றாக வெந்த பிறகு அடுப்பை விட்டு இறக்குவதற்கு முன்பு ஏலக்காய் தூளை சேர்த்துக்
கொள்ளவும்.
5. தேவையெனில் ஆறிய பிறகு குங்குமப்பூவை சேர்த்துக் கொள்ளுங்கள். 6. இதனை வெதுவெதுப்பாகவோ அல்லது ஆறவைத்த பிறகோ கொடுக்கலாம்.
No comments:
Post a Comment