Karach Service (காராச் சேவு)
தேவை: சுடலை மாவு - 2 கப், பச்சரிசி மாவு - கால் கப், நெய் - 5 டேபிள் ஸ்பூன், மிளகாய்ப் பொடி - 1 டேபிள் ஸ்பூன், வெள்ளைப் பூண்டு - 3 பல் , சீரகம், மிளகு - தலா 2 டீஸ்பூன், பெருங்காயம் - 1 டீஸ்பூன், உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பூண்டை அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவு இரண்டையும் கலந்து பூண்டு விழுது, பெருங்காயம், மிளகாய்ப் பொடி, மிளகு, சீரகம், நெய் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து, பிசைந்த மாவை சேவுக்கான அச்சில் போட்டு, மாவுத் துண்டு கள் நீள நீளமாக எண்ணெயில் விழுமாறு நேரிடையாகப் பிழியவும். புரட்டிப் போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும்.
சூடாக சேமியா கேசரியைப் பரிமாறி. பக்கத்தில் காராச் சேவையும் வைத்துச் சாப்பிடும்போது காம்பினேஷன் சூப்பராக இருக்கும்
No comments:
Post a Comment