Jawaharlal Nehru (ஜவ்வரிசி கீர் )
வயது - குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்
தேவையானவை :
1. ஜவ்வரிசி - 2 டேபிள் ஸ்பூன்
2. பனங்கல்கண்டு அல்லது வெல்லப்பாகு - 1 டீஸ்பூன் 3. ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
4. பாதாம் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை :
1. ஜவ்வரிசியை நன்றாக குழுவிக் கொள்ளவும்.
2. ஜவ்வரிசியின் வகையை பொறுத்து அதனை ஊறவைத்துக் கொள்ளலாம். சில ஜவ்வரிசி வகையை கால் மணி நேரம் ஊறவைத்தால் போதும். சில வகை இரவு முழுவதும் ஊறினால் தான் நன்றாக இருக்கும்.
3. நன்றாக ஊறிய ஜவ்வரிசியை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக கொழகொழப்பாக ஆகும் வரை வேகவிடவும்.
4. இத்துடன் பனங்கல்கண்டு தூள் அல்லது வெல்லட்பாகு கலந்து கொள்ளவும். 5. இதில் ஏலக்காய் தூள் மற்றும் பாதாம் தூளை சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்....
தெரிந்து கொள்ள வேண்டியது :
பொதுவாக ஜவ்வரிசி குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் ஜவ்வரிசி நீர் செய்து 7 மாத குழந்தைக்கு கொடுக்கும் போது அது அவர்களின் வயிற்றுக்கு போதுமானதாக இருக்கும்.
இதில் ஸ்டார்ச் சத்து நிரம்பியிருக்கிறது. ஆனால் சத்துகள் இதில் குறைவு தான்..
மலச்சிக்கல் பிரச்சினைக்கு ஜவ்வரிசி தீர்வளிக்கும்.
"மலச்சிக்கல் பிரச்சினைக்கு ஜவ்வரிசி தீர்வளிக்கும்"
No comments:
Post a Comment