GARLIC CHILLI CHUTNEY பூண்டு மிளகாய் சட்னி - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 31 July 2021

GARLIC CHILLI CHUTNEY பூண்டு மிளகாய் சட்னி

Poondu Milagai Chutney Recipe In Tamil

GARLIC CHILLI CHUTNEY பூண்டு மிளகாய் சட்னி


இன்று காலை உணவாக உங்கள் வீட்டில் இட்லி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக என்ன சட்னி செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வெறும் தேங்காய் சட்னி செய்ய நினைத்திருந்தால், அத்துடன் சேர்த்து பூண்டு மிளகாய் சட்னியையும் செய்யுங்கள். இந்த பூண்டு மிளகாய் சட்னி செய்வது மிகவும் சுலபம். அதோடு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு மிளகாய் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு மிளகாய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அடிதப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் - 5

* பூண்டு - 10 பல்

 வரமிளகாய் - 5

* காஷ்மீரி மிளகாய் - 5

* புளி - 1 டேபிள் ஸ்பூன்

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வேண்டும்.

* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.


* பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, 2-3 நிமிடம் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் மாறும் வரை வதக்கி இறக்கினால், சுவையான பூண்டு மிளகாய் சட்னி தயார்.

குறிப்பு:

* வதக்கி அரைத்து தாளித்த பின் சட்னியை நீண்ட நேரம் வேக வைக்கக்கூடாது.

* இந்த சட்னிக்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்தினால், அது இந்த சட்னிக்கு நல்ல ப்ளேவரைக் கொடுக்கும். எக்காரணம் கொண்டும் நல்லெண்ணெயின் அளவைக் குறைத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால், சட்னி பச்சை வாசனையுடன் இருக்கும்.

* நல்லெண்ணெய் நல்ல சுவையைக் கொடுப்பதோடு, காரத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். கூடுதலாக தாளிக்கும் போது கடுகுடன், சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.


* சட்னியின் நிறம் அதற்கு பயன்படுத்தும் வரமிளகாய் வகையைப் பொறுத்தது. இந்த சட்னியில் பாதி வரமிளகாயும், பாதி காஷ்மீரி வரமிளகாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் காஷ்மீரி வரமிளகாய் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.


No comments:

Post a Comment