Cauliflower Lemon Rice (காலிஃப்ளவர் லெமன் ரைஸ் )
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் துருவியது - 1 கப், எலுமிச்சை ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3, பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல், கடுகு - அரை தேக்கரண்டி, முந்திரிப் பருப்பு - 10, பெருங்காயத்தூள் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய
கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, தேனை.
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி.
செய்முறை: துருவிய காலிஃப்ளவரை ஆவியில் வேகவைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகை பொரிய விடவும். இத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பொரிய விடவும். இப்போது பச்சை மிளகாய் சேர்த்து, வெள்ளை நிறம் வரும்வரை வதக்கவும். பின்பு பூண்டு சிறிது வதக்கி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அடுப்பினை அணைத்து விட்டு எலுமிச்சை பிழியவும் (சிறிது எலுமிச்சை சாறு போதும்.
இத்துடன் துருவி, ஆவியில் வேகவைத்த காலிஃப்ளவர் சேர்த்து கிளறி, சிறிதுநேரம் மூடி வைக்கவும் (காலிஃப்ளவர் அதிகம் வேகக்கூடாது). கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
மைதிலி தியாகு
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 338, புரதம்: 10, கொழுப்பு: 22, மாவுச்சத்து: 24.
No comments:
Post a Comment