Banana pulp Age - In the 5th month of the baby(வாழைப்பழ கூழ் வயது - குழந்தையின் 5 வது மாதத்தில்)
இருந்து தரலாம்
தேவையானவை:
பழுத்த வாழைப்பழம் - ஒன்று
* ஏலக்காய் பொடி - தேவையெனில்
செய்முறை:
1. வாழைப்பழத்தை உரித்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்,
2. பின் இதனை முள்கரண்டியால் மசிக்கவும் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
3. எளிதில் செரிமானமாக உதவும் தன்மை கொண்ட ஏலக்காய் பொடியை இத்துடன் சேர்த்துக்
கொள்ளலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
சத்துகள் அதிகம் நிரம்பிய உணவுகளில் பிரதான இடம் பெற்றது வாழைப்பழம்.
கடைகளில் வாழைப்பழம் வாங்கும் போது மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கவேண்டும்.
பழத்தின் மீது கரும்புள்ளிகள் இருக்கும் பழங்களை தவிர்த்து விடுங்கள்.
பழத்தை மசித்த உடனே அது பழுப்பு நிறத்தில் மாறி விடும். எனவே அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளன.
அதிகளவில் இதனை சாப்பிட்டால் மலச்சிக்கல் உருவாகும்.
குழந்தைக்கு எளிதில் செரிமானம் ஆகும் தன்மை கொண்ட பழம் இது என்பதால் முதல் முதலில் குழந்தை சாப்பிடும் போது இதனை
கொடுக்கலாம்...
No comments:
Post a Comment