special-4-egg-said-dish-in-tamil(வீட்டில் காய்கறி இல்லையா? அப்பொழுது உடனே முட்டையை வைத்து இந்த சுவையான டிஷ்களை சட்டென செய்து அசத்துங்கள்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 13 November 2021

special-4-egg-said-dish-in-tamil(வீட்டில் காய்கறி இல்லையா? அப்பொழுது உடனே முட்டையை வைத்து இந்த சுவையான டிஷ்களை சட்டென செய்து அசத்துங்கள்)

omellet

வீட்டில் காய்கறி இல்லையா? அப்பொழுது உடனே முட்டையை வைத்து இந்த சுவையான டிஷ்களை சட்டென செய்து அசத்துங்கள்


காய்கறி சாப்பிடாதவர்கள் கூட இருப்பார்கள். ஆனால் முட்டையை பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்கமாட்டார்கள். முட்டையில் விதவிதமாக சமைத்து கொடுக்கலாம். பல உணவு வகைகளை சமைப்பதற்கு முட்டை பயன்படுகிறது. முட்டை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்களும் அறிவுரை கூறுகின்றனர். அவ்வாறு முட்டையை தினமும் ஒரே மாதிரியாக செய்து கொடுக்காமல் சற்று விதவிதமாக சமைத்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு முட்டையை வைத்து செய்யக்கூடிய உணவு வகைகளை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

டிஷ்: 1 வீட்டில் கறி குழம்பு வைத்திருந்தால் அதில் ஒரு கரண்டி குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் அரை சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்த கலவையை அதில் ஊற்றி கொள்ள வேண்டும். பின்னர் அரை வேக்காட்டுடன் அதன் அனைத்து புறமும் லேசாக சுருட்டி உருண்டையாக எடுக்க வேண்டும். இதனை அப்படியே சாப்பிடும் பொழுது மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

டிஷ்: 2 ஒரு வெங்காயம், சிறிய தக்காளி 1 மற்றும் ஒரு பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொண்டு, இவற்றுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி ஆம்லெட் போட்டு எடுக்க வேண்டும்.

டிஷ்: 3 முதலில் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் ஒரு பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளற வேண்டும். இவை சற்று உதிர்ந்து வரும் பொழுது அரை ஸ்பூன் மிளகுத்தூள் கால் ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி தழைகளை சேர்த்து அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

டிஷ்: 4 முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கரண்டியைப் பயன்படுத்தி நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள முட்டையை அதன் மீது ஊற்ற வேண்டும். பிறகு இரண்டு புறங்களும் நன்றாக வெந்ததும் முட்டையை ஒரு தட்டில் எடுத்து பரிமாறி கொடுக்கலாம்.

No comments:

Post a Comment