cabbage-vada-recipe-in-tamil(முட்டைக்கோஸ் வடை) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 12 November 2021

cabbage-vada-recipe-in-tamil(முட்டைக்கோஸ் வடை)

Cabbage Vada Recipe In Tamil

முட்டைக்கோஸ் வடை


மழை பெய்யும் போது, நன்கு சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். குறிப்பாக பலருக்கு வடை சாப்பிட ஆசையாக இருக்கும். தினமும் ஒரே மாதிரி வடை செய்து சுவைத்து அலுத்துப் போயிருக்கும். சற்று வித்தியாசமான வடை சாப்பிட வேண்டுமானால், முட்டைக்கோஸ் கொண்டு வடை செய்யுங்கள். இந்த வடை மிகவும் சுவையாக இருப்பதோடு, விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு - 1.5 கப்

* முட்டைக்கோஸ் - 2 கப் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகா - 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை - ஒரு கையளவு

* உப்பு - சுவைக்கேற்ப

* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அதை நன்கு கழுவி, பிளெண்டரில் போட்டு தேவையான நேரத்தில் லேசாக நீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக நீரை சேர்த்து விட வேண்டாம்.

* பின்பு ஒரு பௌலில் அரைத்த உளுத்தம் மாவு, முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.


* எண்ணெய் சூடானதும், நீரில் கையை நனைத்து, சிறிது மாவை எடுத்து, அதன் நடுவே ஒரு துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், முட்டைக்கோஸ் வடை தயார்.

No comments:

Post a Comment