கருவேப்பிலை சட்னி இப்படி அரைச்சு பாருங்களேன். யாருமே வேணாம்னு சொல்லவே மாட்டாங்க.
பெரும்பாலும் கருவேப்பிலையை நாம் சமையலில் சேர்ப்பதே வாசத்திற்காக தான். அந்த கருவேப்பிலையை நாம் சாப்பிடுவதே கிடையாது. கருவேப்பிலையை சீராக நம் உணவில் சேர்த்து வந்தால் போதும். முடி உதிர்வு பிரச்சினை குறையும். முடி அடர்த்தியாக கருகருவென வளரும். உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். கருவேப்பிலையை வைத்து நாக்கிற்க்கு சுவையை தரும் சட்னியை எப்படி அரைப்பது என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோமா.
முதலில் இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். - Advertisement - அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன், சின்ன வெங்காயம் தோலுரித்து – 8 பல், வரமிளகாய் – 3, வேர்கடலை – 2 ஸ்பூன், சிறிய பிஞ்ச் அளவு புளி, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் வறுபட்ட பிறகு 1 – கைப்பிடி அளவு தேங்காய் துருவலை சேர்த்து 2 வதக்கு வதக்கி விடுங்கள்
அதன் பின்பு தயாராக கழுவி வைத்திருக்கும் 2 கைபிடி கருவேப்பிலையை கடாயில் சேர்த்து, ஒரு நிமிடம் போல வதக்கி விட்டால் போதும். கருவேப்பிலை பச்சை நிறம் மாறும் வரை வதக்கி விடக்கூடாது. அதேசமயம் கருவேப்பிலை வறுபடாமலும் இருக்கக் கூடாது. பக்குவமாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான். சூப்பரான கருவேப்பிலை துவையல் தயார். இந்த சட்னிக்கு தேவைப்பட்டால் கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து போட்டும் சாப்பிடலாம். தேவையில்லை என்பவர்கள் இதை அப்படியே சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டாலும் நன்றாகத்தான் இருக்கும். கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆகவும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம்தான்.
குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே வாரத்திற்கு 1 நாள் அல்லது 2 நாள் இந்த துவையலை உணவோடு சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாது. மிஸ் பண்ணாம உங்க வீட்லயும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
No comments:
Post a Comment