ஹோட்டல் இட்லி சாம்பார் செய்வது எப்படி? | Idli Sambar Seivathu Eppadi - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday 20 October 2021

ஹோட்டல் இட்லி சாம்பார் செய்வது எப்படி? | Idli Sambar Seivathu Eppadi

Idli Sambar Seivathu Eppadi

ஹோட்டல் இட்லி சாம்பார் செய்வது எப்படி? | Idli Sambar Seivathu Eppadi

Idli Sambar Seivathu Eppadi:- வணக்கம்..! சைவ பிரியர்களாக இருந்தாலும் சரி.. அசைவ பிரியர்களாக இருந்தாலும் சரி.. இட்லி, தோசை, பொங்கல் என்றாலே அதற்கு சாம்பார் சைடிஷாக இருந்தால், வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவார்கள்.. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லி சாம்பார் செய்வதற்கு அதிக நேரம் ஆகாது, உடனே செய்துவிடலாம். இருப்பினும் சிலர் இட்லி சாம்பாரை மிகவும் சுவையாக சமைப்பார்கள், சிலருக்கு ஒரு முறை சாம்பார் நன்றாக வந்திருக்கும், இன்னொரு முறை சரியாக வந்திருக்காது. அப்படி பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதாவது ஹோட்டல் ஸ்டைலில் சுவையான இட்லி சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்..

Idli Sambar Seivathu Eppad – தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – ஒரு கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சைமிளகாய் – 4 (நீளவாக்கில் கீறியது)
தோல் உரித்த சின்ன வெங்காயம் – ஒரு கையளவு
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
பெருங்காயம் தூள் – 1/2 ஸ்பூன்
உருளைக்கிழங்கு – ஒன்று (நறுக்கியது)
கத்தரிக்காய் – இரண்டு (நறுக்கியது)
கேரட் – ஒன்று (நறுக்கியது)
சாம்பார் பொடி செய்ய தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி விதை – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 1/4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
வெள்ளை உளுந்து – ஒரு ஸ்பூன்
வரமிளகாய் – 10
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 ஸ்பூன்
வரமிளகாய் – 4
கருவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – 1/2 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு
இட்லி சாம்பார் செய்யும் முறை – Idli Sambar Seivathu Eppadi:

இட்லி சாம்பார் வைப்பது எப்படி ஸ்டேப்: 1
இப்போ எல்லார் வீட்டுலயும் குக்கர் இருக்கும், ஆகவே அந்த குக்கரை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, மஞ்சள் தூள், பொடிதாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம் தூள், பொடிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், கேரட், நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய், தோல் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 அல்லது 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

வெங்காய சாம்பார் வைப்பது எப்படி ஸ்டேப்: 2
பின் குக்கரில் பிரஷர் அடங்கும் வரை காத்திருங்கள் நாம் அதற்குள் இட்லி சாம்பார் பொடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இட்லி சாம்பார் செய்யும் முறை ஸ்டேப்: 3
கொத்தமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 1/4 டேபிள் ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், மிளகு 1/2 ஸ்பூன், வெள்ளை உளுந்து ஒரு ஸ்பூன், வரமிளகாய் 10 ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பின் அவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள்.

ஹோட்டல் இட்லி சாம்பார் செய்வது எப்படி ஸ்டேப்: 4
குக்கரியில் பிரஷர் அடங்கியதும் அதனை திறந்து பருப்பை லேசாக கடைந்து கொள்ளுங்கள், பின் உங்கள் வீட்டிற்கு தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5
பின் 1 1/2 ஸ்பூன் சாம்பார் பொடி, அரை ஸ்பூன் மிளகாய் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். சாம்பார் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.

ஸ்டேப்: 6
பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து தயார் செய்து வைத்துள்ள சாம்பாரில் சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள். அவ்வளவு தான் சுவையான சாம்பார் தயார்.

இந்த சாம்பாரை இட்லி, தோசை, வடை, பொங்கல் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.. ஆகவே கண்டிப்பாக இதனை ட்ரை செய்து பாருங்கள்.

குறிப்பு:
இட்லி சாம்பாரில் பரங்கிக்காய் அல்லது முருங்கைக்காய் சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும்.
சாம்பார் பொடியை தேவையான அளவு தயார் செய்து உங்கள் சமையலறையில் ஸ்டோர் செய்து வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment