மாங்காய் சாதம் மிக சுவையாக செய்வது எப்படி..!
Mango Rice in Tamil / மாங்காய் சாதம் ரெசிபி: மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். மாங்காயில் அனைவரும் ஊறுகாய் செய்துதான் பார்த்திருப்போம். ஆனால் மாங்காயில் சுவையான மாங்காய் சாதம் எப்படி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளுவோம். இந்த மாங்காய் சாதம் உங்களுக்கு காலை உணவாகவும் நீங்கள் செய்து உண்ணலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்து விடலாம். இந்த மாங்காய் சாதம் செய்ய அதிகமாக பொருள்களெல்லாம் தேவையில்லை. வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருள்களே போதுமானது..! இந்த மாங்காய் சாதத்தின் சுவையானது ஒரு முறை நீங்கள் சாப்பிட பிறகு அடிக்கடி சாப்பிட தூண்டும் அளவிற்கு சுவைமிக்கதாக இருக்கும். சரி வாங்க இந்த சுவை மிகுந்த மாங்காய் சாதம் எப்படி செய்யலாம்,அதற்கு என்னென்ன தேவையான பொருள் என்று கீழே விரிவாக படித்தறியலாம்..!
மாங்காய் சாதம் செய்ய – தேவையான பொருள்:
வேக வைத்த சாதம் – 1 கப்
துருவிய மாங்காய் – 1
பச்சை மிளகாய் – 10
பெருங்காயம் – தேவையான அளவு
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பச்சை வேர்க்கடலை – 1/2 கப்
கருவேப்பிலை – தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லி – 1 கைப்பிடியளவு
தேங்காய் துருவல் – 1 கப்
வெந்தய தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1/2 கப்
மஞ்சள் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
ஸ்டேப் 1: மாங்காய் சாதம் செய்வதற்கு முதலில் மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரவென அரைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 2: அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடாய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலை போட்டு தாளிக்கவும். அதன்பிறகு 2-3 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும்.
ஸ்டேப் 3: மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள விழுதையும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக 2 நிமிடம் வரை வதக்கி கொள்ளவும்.
ஸ்டேப் 4: அடுத்து நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி, வெந்தயப் பொடி, சமைத்து வைத்துள்ள சாதம், துருவிய மாங்காய் எல்லாம் சேர்த்து வதக்க வேண்டும். மாங்காய் ரொம்ப புளிப்பாக இருந்தால் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் 5: அதன் பிறகு துருவிவ வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அதனுடன் வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை அணைத்து விடலாம். அவ்ளோதாங்க டேஸ்டான மாங்காய் சாதம் ரெடியாகிவிட்டது.
No comments:
Post a Comment