தக்காளி பூண்டு சட்னி
தேவையான பொருட்கள்:
* பெரிய தக்காளி - 4
* பூண்டு - 10 பற்கள்
* வரமிளகாய் - 6
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிது (ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு
வாணலியில் தக்காளியைப் போட்டு, அத்துடன் பூண்டு மற்றும் எண்ணெய் ஊற்றி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கை மசிக்கும் கரண்டியால் நன்கு மசித்து விட்டு பரிமாறினால், சுவையான தக்காளி பூண்டு சட்னி தயார்.
குறிப்பு:
* இந்த சட்னிக்கு தக்காளியை நேரடியாக நெருப்பில் ஓரளவு கருமையாக வாட்டி, பின்
பயன்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.
* வேண்டுமானால், இதில் ஒரு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
* சட்னி மென்மையாக வேண்டுமென நினைப்பவர்கள், மிக்சர் ஜாரில் அரைத்துக் கொள்ளலாம்.
* முக்கியமாக இந்த சட்னியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment