pualaky-poriyal- புடலங்காய் பொரியல் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday 10 September 2021

pualaky-poriyal- புடலங்காய் பொரியல்

femina

புடலங்காய் பொரியல்


 வாசகிகள் பகிர்ந்து கொள்ளும் சுவையான சமையல் ரெசிபி.
இம்முறை வழங்கியிருக்கிறார் சமையலில் ஆர்வம் கொண்டிருக்கும் வரலட்சுமி செல்வகுமார்

தமிழர்கள் அடிக்கடி சமைக்கும் உணவுப் பொருட்களில் புடலங்காய் முக்கியமானது. அதிலும் ஏதேனும் விழா என்றால், உடனே புடலங்காயை வாங்கி வந்து, கூட்டு, பொரியல், குழம்பு என்று பல வகையில் சமைத்து சாப்பிடுவார்கள். அத்தகைய புடலங்காயில் சுவை மட்டுமின்றி,
உடலுக்கு ஏற்ற பல நன்மைகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்தக் காயில் அதிகளவு நீர்சத்து இருக்கிறது. எனவே இந்த காயை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட்டு வருவது நல்லது.

தேவையான பொருள்கள்
புடலங்காய் - 1
*கடலைப் பருப்பு - 3
மேசைக்கரண்டி
*தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
*வர மிளகாய் - 3
*மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
*கடுகு - 1/2 தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணெய் - தேவையான அளவு
*உப்பு - தேவையான அளவு

செய்முறை
1. முதலில் புடலங்காயை உப்பு வைத்து நன்கு தேய்த்து, நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
2. பின் அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, பொடியாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொள்ள வேண்டும்.
3. பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பைக் கழுவிப் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். 4. பின்னர் வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
5. அடுத்து வேக வைத்துள்ள புடலங்காயை சேர்த்து உப்பு போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, காயை வேக வைக்கவும். காயானது வெந்ததும்,
அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
6. கடாயில் உள்ள நீர் முழுவதும் வற்றியதும், அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறி இறக்க வேண்டும். புடலங்காய் பொரியல் தயார்.

வரலட்சுமி செல்வகுமார்
திருமதி வரலட்சுமி செல்வகுமார், தன் குடும்பத்தாருக்கு வித விதமாக உணவுகள் சமைத்து கொடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். ஃபெமினா வாசகியான
இவர் நமக்கு இந்த ரெசிப்பியை வழங்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment