பெருங்காயம்
பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. இந்த மசாலாவின் தனித்துவத்தை கண்டறிகிறார் ஆ.வீ.முத்துப்பாண்டி
பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில்
பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.
பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது.
இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது.பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படுகிறது.
No comments:
Post a Comment