paneer-makhani-recipe பன்னீர் மக்கானி - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Tuesday 14 September 2021

paneer-makhani-recipe பன்னீர் மக்கானி

Paneer Makhani Recipe In Tamil

பன்னீர் மக்கானி

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 1 1/2 கப்

* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* பிரஷ் க்ரீம் - 1-2 டேபிள் ஸ்பூன்

* கசூரி மெத்தி/உலர்ந்த வெந்தயக்கீரை - 1 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்

* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் (இறுதியில் சேர்க்க)

* உப்பு - சுவைக்கேற்ப

வதக்கி அரைப்பதற்கு...

* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

* தக்காளி - 4 (நறுக்கியது)

* சிறிய காஷ்மீரி மிளகாய் - 2

* சிறிய பச்சை மிளகாய் - 1

* இஞ்சி - 1/2 இன்ச்

* பூண்டு - 3 பல்

* பட்டை - 1 இன்ச்

* கிராம்பு - 2

* பச்சை ஏலக்காய் - 2

* கருப்பு ஏலக்காய் - 1

* பிரியாணி இலை - 1

* முந்திரி - 10

* வெண்ணெய் - 1 டீஸ்பூன்

* தண்ணீர் - 3/4 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொருட்கள் மூழ்கும் வரை நீரை ஊற்றி, மூடி வைத்து, மிதமான தீயில் 7-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் மூடியைத் திறந்து, அதில் உள்ள பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் அனைத்தையும் எடுத்துவிட்டு, வாணலியை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மிளகாய் தூள் சேர்த்து, பின் அரைத்து வைத்துள்ளதை வடிகட்டியால் வடிகட்டி ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

* கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் பிரஷ் க்ரீம், கசூரி மெத்தி, கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் கிளறி இறக்கி மேலே சிறிது வெண்ணெயை வைத்தால், சுவையான பன்னீர் மக்கானி தயார்.

குறிப்பு:

* வெண்ணெயில் மிளகாய் தூள் சேர்த்ததும், உடனே அரைத்த விழுதை வடிகட்டி ஊற்ற வேண்டும். இல்லையெனில் கிரேவியின் நிறம் மாறிவிடும்.

* சாதாரண மிளகாய் தூளுக்கு பதிலாக காஷ்மீர மிளகாய் தூள் பயன்படுத்தினல் நிறம் இன்னும் அற்புதமாக இருக்கும்.

* மில்க் க்ரீமை அளவுக்கு அதிகமாக ச்ர்த்துவிட வேண்டாம்.

* கசூரி மெத்தியை தேயத்தோ, வறுத்தோ பயன்படுத்த வேண்டாம்.

No comments:

Post a Comment