mumbai-street-style-masala-pav-recipe மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday 15 September 2021

mumbai-street-style-masala-pav-recipe மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்

Mumbai Street Style Masala Pav Recipe In Tamil

மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்

தேவையான பொருட்கள்:

* பாவ் பன் - 4

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 3/4 கப் (பொடியாக நறுக்கியது

* குடைமிளகாய் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* வெண்ணெய் - 2 டீஸ்பூன் + டோஸ்ட் செய்ய 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - 1/4 கப்

மசாலா பொடிகள்:

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* பாவ் பாஜி மசாலா பொடி - 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

அலங்கரிக்க...

* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)


செய்முறை:

* முதலில் ஒரு பெரிய தோசை தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

* பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

* பின் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போக நன்கு வேக வைக்க வேண்டும்.

* பிறகு அதில் மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, உருளைக்கிழங்கு மசிப்பதைக் கொண்டு நன்க ு மசித்து விட வேண்டும். மசாலா கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.

* இறுதியில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து, தவாவின் ஒரு பக்கமாக தள்ளி வையுங்கள். மறு பக்கத்தில் சிறிது வெண்ணெய் வைத்து, அதன் மேல் பாவ் பன்னை இரண்டாக வெட்டி இரண்டு பக்கத்தையும் லேசாக டோஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் வெட்டி டோஸ்ட் செய்த பக்கத்தில் மசாலாவைப் பரப்புங்கள். அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து சூடாக பரிமாறினால் சுவையான மசாலா பாவ் தயார்!

No comments:

Post a Comment