hotel-style-coconut-chutney-recipe-(ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 25 September 2021

hotel-style-coconut-chutney-recipe-(ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி)

Hotel Style Coconut Chutney Recipe In Tamil

ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

* தேங்காய் - 1 கப் (துருவியது)

* பச்சை மிளகாய் - 1

* இஞ்சி - 1 சிறிய துண்டு

* சீரகம் - ஒரு சிட்டிகை

* உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.


* பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்!

No comments:

Post a Comment