ganesh-chaturthi-special-sweet-rava-kozhukattai-recipe- விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: இனிப்பு ரவா கொழுக்கட்டை - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Tuesday 14 September 2021

ganesh-chaturthi-special-sweet-rava-kozhukattai-recipe- விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: இனிப்பு ரவா கொழுக்கட்டை

Ganesh Chaturthi Special Ammini Kozhukattai Recipe In Tamil

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: இனிப்பு ரவா கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

* ரவை - 1 கப்

* வெல்லம் - 3/4 கப்

* தண்ணீர் - 2 கப்

* துருவிய தேங்காய் - 1/2 கப்

* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

* நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் வெல்லத்தை நீரில் போட்டு அடுப்பில் வைத்து கரைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ரவையைப் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு வெல்ல நீரை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு அதில் வறுத்த ரவையை சேர்த்து கிளறி, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் அந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, 5-8 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான இனிப்பு ரவா கொழுக்கட்டை தயார்.

No comments:

Post a Comment