பூசணிக்காய் புளிக்குழம்பு
நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பூசணிக்காயை கோடைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், உடல் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் பிடிக்குமானால், இதுவரை அதைக் கொண்டு பொரியல் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்றால், இனிமேல் அதைக் கொண்டு அட்டகாசமான புளிக்குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்குமாறு அற்புதமான சுவையுடன் இருக்கும். மேலும் இந்த புளிக்குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
*
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* வெங்காய வடகம் - 6 துண்டு
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்துக் கொள்ளவும்)
* பூண்டு - 6 பல் (தோலுரித்துக் கொள்ளவும்)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் பூசணிக்காய் - 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - ஒரு சிறு துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை
அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகத்தைப் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 1-2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி மற்றும் பூசணிக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் புளி நீர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி 10 நிமிடம் குறைவான
தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு தயார்.
No comments:
Post a Comment