thanjavur-style-masala-rasamதஞ்சா வூர் ஸ்டைல் மசாலா ரசம் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday 20 August 2021

thanjavur-style-masala-rasamதஞ்சா வூர் ஸ்டைல் மசாலா ரசம்

Thanjavur Style Masala Rasam Recipe In Tamil

தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம்

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் - 8-10

* தக்காளி - 2 (பெரியது)

* பூண்டு - 3 பல்

* பச்சை மிளகாய் - 4

* துருவிய தேங்காய் - 1/4 கப்

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* கொத்தமல்லி - சிறிது

* உப்பு - சுவைக்கேற்ப

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* கிராம்பு - 5

* பட்டை - 1 இன்ச்

* அன்னாசிப்பூ - 2

* சோம்பு - சிறிது

செய்முறை:

* முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, தக்காளி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தக்காளியை மென்மையாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் மிக்சர் ஜாரில் தேங்காயை போட்டு அரைத்து, அதிலிருந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* இந்நிலையில் அரைத்த பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் தக்காளி வேக வைத்த நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.


* பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5-6 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது கொத்தமல்லி மற்றும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம் தயார்.

No comments:

Post a Comment