ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட்
தேவையான பொருட்கள்:
* பால் - 1 கப்
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்
* கொக்கோ சிப்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
ஃபுட் கலர் - சில துளிகள்
* மார்ஷ்மெல்லோ - சிறிது
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* பின் ஒரு பாத்திரம்/பேனில் பாலை ஊற்றி, அதில் கொக்கோ பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பின்பு அத்துடன் சர்க்கரை மற்றும் கொக்கோ சிப்ஸ் சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதை அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அதில் வென்னிலா எசன்ஸ் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியில்
அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சில மார்ஷ்மெல்லோ சேர்த்து பரிமாறினால், சுவையான ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட் தயார்
No comments:
Post a Comment