பூசணிக்காய் தால்
பூசணிக்காயில் வைட்டமின் ஏ மற்றும் பிற வைட்டமின்கள் ஏராளமான அளவில் உள்ளது. அதோடு பூசணிக்காய் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். இதில் கலோரிகள் குறைவாகவும், பிற சத்துக்கள் அதிகமாகவும் நிறைந்துள்ளதால், எடை இழப்பை ஊக்குவிக்கும். பூசணிக்காயைக் கொண்டு பொரியல் தான் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த பூசணிக்காயைக் கொண்டு தால் செய்யலாம் என்பது தெரியுமா? இந்த தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* பாசிப் பருப்பு - 1/4 கப்
* மைசூர் பருப்பு - 1/4 கப்
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* பட்டை - 1 இன்ச்
* பிரியாணி இலை - 1
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் பூசணி/பரங்கிக்காய் - 250 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் அனைத்து பருப்புக்களையும் நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் பூசணிக்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கழுவிய பருப்புக்களைப் போட்டு, அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, பிரியாணி இலை, தக்காளி, பூசணிக்காய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, பருப்புடன் சேர்த்து கிளறினால், சுவையான பூசணிக்காய் தால் தயார்.
No comments:
Post a Comment