பன்னீர் மில்க் கிரேவி
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கவும்)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
(பெரியது மற்றும் நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* பால் - 1 கப்
* சோள மாவு - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பாலில்
சோள மாவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே பேனில் சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி, சிறிது நீர் ஊற்றி,
பச்சை வாசனை போகும் அளவு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இப்போது சோள மாவு கலந்த பால் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், பன்னீர் மில்க் கிரேவி தயார்.
No comments:
Post a Comment