பன்னீர் தேங்காய் கிரேவி
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3/4 கப்
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கிரேவி மசாலாவிற்கு...
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி விதைகள், சீரகம்,
வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மசாலாப் பொருட்களை சேர்த்து அரைத்ததும், அத்துடன் வதக்கிய தேங்காய் வெங்காய கலவையையும் சேர்த்து, சிறிது நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் பன்னீர் துண்டுகளைப் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள வெண்ணெயை
சேர்த்து உருகியதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், கரண்டியால் தக்காளியை நசுக்கி விட்டு, பின் கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீரை சேர்த்துக் கொள்ளலாம்.
* கிரேவி நன்கு கொதித்ததும், அதன் மேல் சிறிது உலர்ந்த வெந்தய கீரையை கையால் நசுக்கி போட்டு, கிளறி இறக்கினால், சுவையான பன்னீர் தேங்காய் கிரேவி தயார்.
No comments:
Post a Comment