Mint - Matathi Preyani (மின்ட் - மேத்தி பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிரி ஒரு கட், முளைகட்டிய வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், புதினா - ஒரு சிறிய கட்டு, தேங்காய்த் துருவல் - கால் கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்பர்), இஞ்ரி - அரை அங்குலத் துண்டு, மஞ்சள்தூள் - சிறிதளவு, ஓமம் - அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் ஒரு மூடி (சாறு எடுக்கவும்). பிரியாணி இலை - ஒன்று, குட்டி உருளைக்கிழங்கு - 10, லவங்கம் - 2, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும், வாணலியில் நெய்வீட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும், உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் உரிக்க வும், வாணலியில் எண்ாெய்விட்டு சூடானதும் உருளைக்கிழங்கைப் போட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பதினாவை எண்ணெயில் வதக்கவும். அதில் பாதியளவு எடுத்துக்கொண்டு... தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய்,
இஞ்சி, ஓமம் சேர்ந்து விழுதாக அரைக்கவும், வதக்கிய மீதி புதினாவைத் தளியே வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, முளைகட்டிய வெந்தயம், அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சன்தூள் சேர்த்து, தேவையான நீர்விட்டு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு, மீதி புதினாவைச் சேர்த்து, வெந்ததும் எலுமிச்சை சாறு, பொரித்த உருளைக்கிழங்கைச் சோத்துக் கிளறி பரிமாறவும்,
No comments:
Post a Comment