karadaiyan-nombu-sweet-adai- காரடையான் நோன்பு இனிப்பு அடை - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 27 August 2021

karadaiyan-nombu-sweet-adai- காரடையான் நோன்பு இனிப்பு அடை

Karadaiyan Nombu Sweet Adai Recipe In Tamil

காரடையான் நோன்பு இனிப்பு அடை

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி மாவு - 1 கப்

* வெல்லம் - 1 கப்

* தண்ணீர் - 2 கப்

* பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்

* காராமணி - 1 /4 கப்


* ஏலக்காய் - 1 (பொடித்து கொள்ளவும்)

செய்முறை:

* முதலில் காராமணியை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, விசில் விட்டு வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய் மற்றும் வெல்லத்தைப் போட்டு, வெல்லத்தைக் கரைய வைக்க வேண்டும்.

* வெல்லம் நன்கு கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.


* பிறகு தீயை குறைத்துவிட்டு, அதில் அரிசி மாவை மெதுவாக கட்டிகள் சேராதவாறு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் அதில் தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

* கலவையானது ஓரளவு குளிர்ந்ததும் கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது அந்த கலவையை சிறு உருண்டைகளாக்கி தட்டையாக தட்டி, நடுவே ஒரு ஓட்டை போட்டால், சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை தயார்.

No comments:

Post a Comment