கடாய் சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/4 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* நறுக்கிய குடைமிளகாய் - 3 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய - 3
* பட்டை - 1 இன்ச்
செய்முறை:
* முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், குடைமிளகாயை சேர்த்து ஒருமுறை வதக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியைப் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.
* பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் மீதமுள்ள வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
* பிறகு ஊற
வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, 1 கப் நீர் ஊற்றி மூடி வைத்து 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் அல்லது குக்கரில் போட்டு 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.
* இறுதியில் குக்கரைத் திறந்து, கிரேவி அதிகம் வேண்டுமானால் தேவையான அளவு நீர் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாயையும் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கடாய் சிக்கன் கிரேவி தயார்.
No comments:
Post a Comment