மொறுமொறுப்பான... வெண்டைக்காய் சிப்ஸ்
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 10
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு துணியால் வெண்டைக்காயை துடைத்து, ஈரப்பசை இல்லாமல் வைத்துக் கொள்ளவும்.
* பின் வெண்டைக்காயின் இரு முனைகளையும் வெட்டி நீக்கிவிட்டு, ஓரளவு நீள நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு துண்டுகளாக்கப்பட்ட வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மாங்காய் தூள், கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைத்து வைத்துள்ள வெண்டைக்காயை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.
* இப்போது மொறுமொறுப்பான வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.
குறிப்பு:
* பொரிப்பதற்கு எண்ணெயை சற்று தாராளமாக வெண்டைக்காய் நன்கு மூழ்கும் அளவு பயன்படுத்த வேண்டும்.
* அதிகமாக நீரை ஊற்றி விட வேண்டாம். லேசாக நீரைத் தெளித்து பிரட்டிக் கொள்ளுங்கள்.
* வேண்டுமானால், இத்துடன் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
* மாங்காய் தூள் இல்லாதவர்கள், எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment