chettinad-muttai-podimas-recipe செட்டிநாடு முட்டை பொடிமாஸ் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday 27 August 2021

chettinad-muttai-podimas-recipe செட்டிநாடு முட்டை பொடிமாஸ்

Chettinad Muttai Podimas Recipe In Tamil

செட்டிநாடு முட்டை பொடிமாஸ்


தேவையான பொருட்கள்:

* முட்டை - 6

* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு - சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

* பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.


* பின்னர் அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

* முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.

No comments:

Post a Comment