Cheese Whisk (சீஸ் புலவு )
தேவையானவை! பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு. பூண்டு 8.பல். உப்பு தேவையான அளவு, துருவிய சீஸ் - அரை கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாசுமதி அரிசியை ஊறவைத்து, உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு வடிந்த சாதம், துருவிய சீஸ். சிறிது உப்பு சேர்த்து இறக்குங்கள். மிக எளிமையாக செய்யக்கூடிய புலவு
என்றாலும் சீஸ் சுவையுடன் பிரமாதமாக இருக்கும்.
குறிப்பட எல்லா வகை பிரியாணிகளுக்குமே நாட்டுத் தக்காளி உபயோகித்தால், கூடுதலான ருசி
கிடைக்கும். பாசுமதி அரிசி ஒரு கப் அளவுக்கு ஒன்றரை கப் தண்ணீர்தான் வைக்கவேண்டும். அரிசி .சிறிது பழையதாக இருந்தால், ஒன்றே முக்கால் கப் தண்ணீர் வைக்கலாம்.
No comments:
Post a Comment