வெண்டைக்காய் முந்திரி பொரியல்
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 1/2 கிலோ
* பூண்டு - 4
* முந்திரி - 8
* துருவிய தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, துணியால் துடைத்துவிட்டு, பின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் முந்திரியைப் போட்டு, பொன்னிறமாக மாறும் வரை வதக்கியதும், வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெண்டைக்காய் நன்கு சுருங்கி வேகும் வரை வதக்கவும்.
* வெண்டைக்காய் நன்கு வெந்ததும், இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் முந்திரி பொரியல் தயார்.
No comments:
Post a Comment